ஓய்வு பெற்ற இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ், அடிக்கடி இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கபில்தேவை விமர்சித்து பேசுவார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து யுவராஜ் விடை பெற்றதற்கு தோனிதான் காரணம் என்றும் அவர் தனது இறுதி காலகட்டத்தில் கையில் பணமே இல்லாமல் இருப்பார் என்றும் யோகராஜ் சாடி இருந்தார்.
மேலும் யோகராஜ் கூறுகையில், ”நான் தோனியை என்றுமே மன்னிக்க மாட்டேன். இவ்வளவு பெரிய கிரிக்கெட் வீரராக இருந்து அவர் என் மகனுக்கு எதிராக செய்ததெல்லாம் ஒவ்வொன்றாக இனி வெளிவரும். இதன் காரணமாக, தோனியின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நிகழும்” என்றும் கூறினார். அதோடு, முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் பற்றியும் தரம் தாழ்ந்து விமர்சித்தார்.
தந்தையின் இத்தகையை விமர்சனங்களுக்கு மறுத்து பேசாமல் யுவராஜ் மவுனமாக இருந்தார். அவர் தனது தந்தையுடன் பேசுவதில்லை. அதனால், தந்தையின் கருத்துக்கு யுவராஜ் எந்த பதிலும் சொல்ல மாட்டார் என்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு நேர்காணலில் பங்கேற்ற யுவராஜ் சிங், தனது தந்தை குறித்து பேசிய வீடியோ மீண்டும் டிரெண்டாகியுள்ளது.
அதில் தனது தந்தை ஒரு மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர் என்று யுவராஜ் சிங் பேசியுள்ளார். மேலும், அதை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். உடனடியாக, அவர் மன நல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
தனது தந்தை குறித்து 7 மாதத்துக்கு முன்பே கணித்துவிட்டார் யுவராஜ் என்று ரசிகர்கள் இப்போது யோகராஜை பார்த்து சிரிப்பாய் சிரிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பட்டப்பகலில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : எஸ்.பி விசாரணை!
”ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் உடன்பாடு இல்லை”: நீதிபதி சுப்பிரமணியன்