இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன்பு 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த வீடியோ காட்சியைத் தனது மகனுடன் சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை யின்போது 18 ஓவரில் இந்திய அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மீதமுள்ள 2 ஓவரில் யுவராஜ் சிங் மற்றும் எம்.எஸ். தோனி களமிறங்கவிருந்தனர்.
யுவராஜ் சிங் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 6 பந்துகளையும் பவுண்ட்ரி எல்லையைத் தாண்டி சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த போட்டியில் இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளராகத் திகழும் ஸ்டூவர்ட் பிராட் பந்து வீசிய ஒரு ஓவரில் இந்த சாதனையை யுவராஜ் சிங் நிகழ்த்தினார். மொத்தம் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.
மேலும் போட்டியின் இறுதியில் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி 200 ரன்கள் எடுத்து இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவின.
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்நிகழ்வை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது 9 மாத மகன் ஓரியன் கீச் சிங் உடன் சேர்ந்து பார்த்து ரசித்துள்ளார். மேலும் அவர் மகனுடன் கிரிக்கெட் பார்த்த வீடியோவைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
”15 ஆண்டுகளுக்குப் பிறகு இதை ஒன்றாகப் பார்ப்பதற்குச் சிறந்த கூட்டணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது யுவராஜ் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
உலக கோப்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு மீது அக்தர் சாடல்!