யூசுப் பதானுக்கு வாய்ப்பளித்த மம்தா : இர்பான் பதான் உருக்கம்!

Published On:

| By christopher

Yusuf Pathan candidate of Berhampore

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட யூசுப் பதானுக்கு வாய்ப்பளித்ததை தொடர்ந்து அவரது சகோதரரும், முன்னாள் இந்திய வீரருமான இர்பான் பதான் உருக்கமுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திருணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று (மார்ச் 10) வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் மஹூவா மொய்த்ரா, மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி, பாலிவுட் மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Yusuf Pathan is TMC candidate from Berhampore Lok Sabha seat | Mint

காங்கிரஸ் கோட்டையில் யூசுப் பதான் போட்டி!

அதேபோன்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோட்டையாக பஹராம்பூர் தொகுதி கருதப்படுகிறது.

1999ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அங்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த தொகுதியில் தான் யூசுப் பதானை திருணாமுல் வேட்பாளராக களமிறக்கியுள்ளார் மம்தா பானர்ஜி.

Irfan Pathan's emotional reaction to Yusuf Pathan's political innings | Latest News India - Hindustan Times

மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்!

இதனையடுத்து அவரது சகோதரரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “நீங்கள் எந்த பெரிய பதவியில் இல்லாவிட்டாலும், உங்களது பொறுமை மற்றும் கருணை மனதால் மக்களுக்குச் சேவை செய்வதை எல்லோரும் அறிவார்கள். இந்த நிலையில் தற்போது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள நீங்கள் ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கையில் உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று இர்பான் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் யூசுப் பதான் வெல்வாரா? காங்கிரஸை வீழ்த்த மம்தா மாஸ்டர் பிளான்! ஆதிர் ரஞ்சனுக்கு விழும் அடி | Is Yusuf Pathan will win Baharampur Constituency? Why Mamata ...

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு!

யூசுப் பதானுக்கு வாய்ப்பளித்தது தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்டுள்ள பதிவில்,

“வங்காளத்தில் இருந்து வெளியாட்கள் ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். திரிணாமுல் யூசுப் பதானை கெளரவிக்க விரும்பினால், அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருக்க வேண்டும். மம்தா பானர்ஜிக்கு உண்மையில் நல்ல எண்ணம் இருந்தால், குஜராத்தில் யூசுப் பதானுக்கு வாய்ப்பளிக்கும்படி  இந்தியா கூட்டணியிடம் கேட்டிருப்பார்.

ஆனால் சாமானிய மக்களை வேதனைப்படுத்தி,  காங்கிரஸை தோற்கடிக்கும் வகையில் பாஜகவுக்கு உதவவதற்காக இங்கு அவரை வேட்பாளராக மம்தா தேர்ந்தெடுத்துள்ளார்” என்று ஆதிர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மம்தாவுக்கு நன்றி!

இதற்கிடையே யூசுப் பதான் தனது பதிவில், “மம்தா அதிகாரி என்னை திருணாமுல் காங்கிரஸ் குடும்பத்துக்குள் வரவேற்றதற்காகவும், நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக ஒலிக்கும் பொறுப்பில் என்னை நம்பியதற்காகவும் மம்தா பானர்ஜிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மக்களின் பிரதிநிதியாக ஏழைகள் மற்றும் நலிவடைந்தவர்களை உயர்த்துவது எனது கடமை, அதைத்தான் நான் சாதிக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்த்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

டிஜிட்டல் திண்ணை: சிறைக்குள் இருந்து வேட்பாளர் செலக்ட் செய்யும் செந்தில்பாலாஜி… அண்ணாமலைக்கு காத்திருக்கும் ஸ்டாலின்

”என் மடியில் கனமில்லை” : ED சோதனை குறித்து ஆதவ் அர்ஜூனா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment