”உங்ககிட்ட வாய் மட்டும்தான் இருக்கிறது” பாக். வீரர்கள் மீது யூனிஸ்கான் பாய்ச்சல்!

Published On:

| By Kumaresan M

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளார்.  ஆனால், சமீப காலமாக  பாபர் அசாம் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தடுமாறி வருகிறார்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் பாகிஸ்தான் வீரர்களை விளாசியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”பாபர் அசாம் உள்ளிட்ட மற்ற வீரர்கள் களத்தில் சரியாக செயல்பட்டு இருந்தால் நல்ல முடிவுகள் கிடைத்திருக்கும். ஆனால் நமது வீரர்கள் செயல்படுவதை விட பேசுவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் வாய் மட்டும்தான் செயல்படுகிறது.

அங்கே, விராட் கோலியை பாருங்கள். மற்றவர்கள் சொல்வதற்கு முன்பாகவே கேப்டன் பதவியை விட்டு விலகி பல சாதனைகளை படைத்து வருகிறார். இதன் மூலம் நாட்டுக்காக விளையாடுவது தான் முதன்மையான விஷயம் என்பதை விராட் கோலி அறிவுறுத்துகிறார். பாபர் அசாம் போன்றவர்கள் விராட் கோலியிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் தங்களை வளர்த்துக் கொள்கிறார்களே தவிர, அணிக்காக விளையாடும் மனப்பக்குவத்தில் இல்லை.

முதலில் நாட்டுக்காக விளையாடிவிட்டு பிறகு, உங்களுக்காக விளையாடிக் கொள்ளுங்கள். பாபர் அசாம் கிரிக்கெட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். அணியிலே சிறந்த வீரர் என்ற முறையில் தான் பாபர் அசாமிற்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. பாபர் அசாம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே அவர் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். சமூக வலைத்தளத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். சமூக வலைத்தளத்தில் யாருக்கும் பதில் சொல்லாமல், உங்களுடைய செயல்பாடுகள் மூலம் பதில் சொல்லுங்கள். உடல் தகுதியை வளர்த்துக் கொள்வதும் மிக அவசியமாகும்” என காட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் பங்கேற்பது யார்? : திருமாவளவன் விளக்கம்!

புதுச்சேரி சிறுமியை சீரழித்து கொன்றவர் சிறையில் உயிரை மாய்த்த பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share