IPL2024: ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் இளம் மற்றும் மூத்த வயது வீரர்… எந்த நாடுன்னு பாருங்க!

Published On:

| By Manjula

துபாயில் நடைபெறவுள்ள மினி ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும், இளம் வயது வீரர் மற்றும் மூத்த வீரர் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.

டிசம்பர் 19-ம் தேதி துபாயில் மினி ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 1166 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் 833 பேர் அதிரடியாக பிசிசிஐ-யால் கழட்டி விடப்பட்டனர்.

மீதமுள்ள 333 வீரர்கள் தற்போது ஏல பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர். அதில் 214 பேர் இந்தியர்கள். 119 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள்.

119 பேர் இதுவரை தேசிய அணிகளில் இடம் பெறாதவர்கள். இந்த ஏலத்திற்கு மொத்தமாக ரூ.262.95 கோடி வரையில் செலவு செய்யப்பட இருக்கிறது.

ஐபிஎல் ஏலமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்க இருக்கிறது.

10 ஐபிஎல் அணிகளுக்கும் சேர்த்து மொத்தமே 77 வீரர்கள் தான் தேவைப்படுகின்றனர். அதிலும் 30 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானவை.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளும் இளம் வயது வீரர் மற்றும் மூத்த வயது வீரர் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

அதன்படி ஆப்கானிஸ்தானின் 16 வயது வீரர் அல்லா ஹசன்பா இளம் வீரராக, மினி ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்கிறார். அதே நாட்டை சேர்ந்த 39 வயதான மொஹம்மது நபி மூத்த வீரராக ஐபிஎல் மினி ஏலத்தில் கலந்து கொள்கிறார்.

நபி முன்னதாக கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

மஞ்சுளா

நாடாளுமன்ற தாக்குதல் : அடிபடும் பாஜக எம்.பி பெயர் – யார் இந்த பிரதாப் சிம்ஹா?

PKL10: தெலுங்கு டைட்டன்ஸுடன் பலப்பரீட்சை… அவரு மட்டும் வேணாம் அலறும் ரசிகர்கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share