இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள்!

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 12 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டி, 5 இருபது ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இதற்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று(ஜூன் 23) வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாட முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதோபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். அதே நேரம் அனுபவ வீரர் புஜாராவுக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

டெஸ்ட் அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

ஒருநாள் அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், சஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

இருபது ஓவர் போட்டிக்கான வீரர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கையில் கரண்டி: சமையல் மாஸ்டர் ஆனாரா சுரேஷ் ரெய்னா?

எதிர்கட்சிகள் கூட்டத்தில் ஆலோசித்தது என்ன? நிதிஷ் குமார் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *