’ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது’- கங்குலி

விளையாட்டு

ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி ,”குறைந்தபட்சம் நம்முடைய அணி தொடர்ந்து ஃபைனலுக்கு தகுதி பெறுவது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

தற்போது பயிற்சியாளராக இருக்கும் ட்ராவிட் மற்றும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு நாக் அவுட் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும்.

இருப்பினும் ஐ.சி.சி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது. ஆனால் நம்மால் குறைந்தபட்சம் 50% வெல்ல முடியும். எனவே தற்போதைய நிலைமையில் ராகுல் ட்ராவிட் பயிற்சியை பற்றி நான் மதிப்பிட விரும்பவில்லை. இவை அனைத்தையும் உலகக்கோப்பை முடிந்த பின் பார்ப்போம். அவருக்கு இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடம் இம்முறை கோப்பையை நெருங்குவதற்கு தேவையான அணி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு வீரராக உலகக் கோப்பைகளில் சிறப்பாக செயல்பட்ட ராகுல் ட்ராவிட்டுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பது நன்றாக தெரியும். எனவே இந்திய அணி சிறப்பாக விளையாடும்  என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும், உலக கோப்பைக்கு முன்பாகவும் பின்பாகவும் நீங்கள் எந்த மாதிரியான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல.

மாறாக உலகக்கோப்பை வெற்றி என்பது அன்றைய நாளில் நீங்கள் எந்த மாதிரியான செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம். இப்போதைக்கு அவர்கள் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர். அதுவே வெற்றி பெறுவதற்கான நல்ல பயிற்சியாக இருக்கும்” என்று கூறினார்.

சென்னை தினம்: வாழ்த்து செய்தியிலும் எதிரொலிக்கும் அரசியல்!

சென்னை தினம்: ஆளுநர் வாழ்த்தில் சர்ச்சை!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “’ஐசிசி தொடர்களில் எல்லா நேரத்திலும் வெல்ல முடியாது’- கங்குலி

  1. Yes he cannot ,neither can this present team,only Australia can win a record 6th title or a resurgent ultra agressive England can win the world cup again

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *