ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணியானது நியூசிலாந்து மற்றும் இந்தியாவுடன் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனையடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான். yograj singh says pakistan
வாசிம் அக்ரம், ஜாவேத் மியாண்டட், ஷோயப் மாலிக், முகமது ஹபீஸ் உள்ளிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் அணியை கடுமையான விமர்சித்துள்ளனர்.
இந்தநிலையில், தற்போதைய பாகிஸ்தான் அணியைப் பற்றி கடுமையாகப் பேசியதற்காக வாசிம் அக்ரம் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் வெட்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, “வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் ஆகியோர் பாகிஸ்தான் அணியைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு வெட்கப்பட வேண்டும். வாசிம் கிரிக்கெட் தொலைக்காட்சிகளில் வர்ணணை செய்து பணம் சம்பாதிக்கிறார்.
இதையெல்லாம் விட்டுவிட்டு உங்கள் நாட்டு வீரர்களுக்கு சரியான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்குங்கள். என்னால் பாகிஸ்தானுக்கு சென்று வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். ஒரு வருடத்தில் டீமை சிறப்பாக உருவாக்குவேன். நான் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் என்னுடைய கிரிக்கெட் அகாடமியில் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன். கிரிக்கெட் மீதான விருப்பம் தான் இதற்கெல்லாம் காரணம்.
பாகிஸ்தான் அணியைப் பற்றி விமர்சனம் செய்வது மிகவும் எளிது. அதற்கு பதிலாக அணியில் மாற்றம் கொண்டு வர உங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். yograj singh says pakistan