ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஏப்ரல் 25) அறிவித்துள்ளது
ஐசிசியின் 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று(ஏப்ரல் 25) இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
இந்திய அணி வீரர்கள்
ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராஹானேவிற்கு வாய்ப்பு
அஜிங்கியா ரஹானே தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வீரராக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ரன்களை குவித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் ரஹானே.
கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரஹானே 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 71ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ரஹானே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடததால், அணியில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, ரஹானேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மோனிஷா
போராடும் மல்யுத்த வீராங்கனைகள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா வைரல் டான்ஸ் வீடியோ!