WTC Final: சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ், ஸ்மித் ஜோடி!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா , ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று(ஜூன் 7) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார்.
பின்னர், டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடங்கிய ஆட்டத்தில் சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது.
சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார். தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது. ஹெட் 60 ரன்னுடனும், ஸ்மித் 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கோவில் வாசலில் நடிகைக்கு முத்தம்: பாஜக கண்டனம்!
“ஆர்.என்.ரவி ஆளுநரா அரசியல்வாதியா?” – பி.சி.ஸ்ரீராம் காட்டம்!