WTC Final: இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் செய்த பிசிசிஐ

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் புதிய வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ இன்று (மே 8) வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

பாரம்பரியமிக்க லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டி, இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது.

இதற்கிடையே கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுலுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார். விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், கே.எல்.ராகுல் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

BCCI annouced updated list of indian squad

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் புதிய வீரர்கள் அடங்கிய பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

அதில் காயமடைந்த கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெய்தேவ் உனட்கட் மற்றும் உமேஷ் யாதவுக்கும் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்- ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே,

கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெயதேவ் உனாட்கட், உமேஷ் யாதவ், இஷான் கிஷன்.

ஸ்டான்ட் பை வீரர்கள் – ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்

கிறிஸ்டோபர் ஜெமா

டிடிவி தினகரனை சந்தித்தார் ஓபிஎஸ்

பி.டி.ஆர் இலாகா பறிப்பு: நிதியமைச்சர் ஆகிறாரா தங்கம் தென்னரசு?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *