WTC Final: சாம்பியன் பட்டம் யாருக்கு? ஏபிடி வில்லியர்ஸ் கணிப்பு!

Published On:

| By Jegadeesh

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை ஜூன் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்லும்,.

அதேவேளையில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பது குறித்த கணிப்புகளை முன்னாள் வீரர்கள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசேன் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து நேற்று(ஜூன் 5) ஜியோ சினிமா நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி.டிவில்லியர்ஸ்”,

ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

எனவே நிச்சயம் அவர்கள் ஆஸ்திரேலிய அணியை இந்த போட்டியில் வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது.

அதோடு இந்த மைதானம் பேட்டிங் செய்ய நல்ல மைதானம். நிச்சயம் இந்த போட்டியின் கடைசி இரு நாட்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் புகுந்து விளையாடுவார்கள் என்று நினைக்கிறேம்”என்று கூறியுள்ளார்.

WTC Final AB de Villiers Nasser Hussain predict winner IND AUS

அதேபோன்று ஐசிசி இணையளத்தில் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன்,

“இந்திய அணி எந்த விதமான மைதானத்திலும், எந்த விதமான அணியையும் வெல்லும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில் அந்த அளவிற்கு சிறப்பான செயல்பாட்டை இந்திய அணி வெளிப்படுத்தி வருகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா மைதானத்தில் அவர்களை தடுமாற வைத்த இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து சூழலிலும் ஆஸ்திரேலிய அணியை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று நான் கருதுகிறேன்” என நாசர் ஹூசேன் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பயணிகளின் கவனத்திற்கு… இனி ஈசியா டிக்கெட் கிடைக்கும்!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர் நடத்தும் ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel