உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது.
நேற்று(ஜூன் 9) நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 4 வது நாள் ஆட்டத்தில் இன்று(ஜூன் 10) களமிறங்கியது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 270 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்துள்ளது.
இந்திய அணியை விட ஆஸ்திரேலியா 443 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திருப்பதியில் ஐஸ்வர்யா லக்ஷ்மி சாமி தரிசனம்!
கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் : பின்னணி என்ன?