WTC Final: ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலை!

விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது. ஸ்மித் 128 ரன்களும், ஹெட் 161 ரன்களும் குவித்தனர்.

இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும், ஷமி, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இன்று(ஜூன் 9) நடைபெற்று வரும் 3-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ரஹானே 89 ரன்களும், ஷர்துல் தாகூர் 51 ரன்களும், ஜடேஜா 48 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்டார்க் பொலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லையன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் வார்னர் 1 ரன்னிலும், கவாஜா 13 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், லபுசேசன் 16 ரன்களுடனும், ஸ்மித் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தேசிய விளையாட்டு போட்டிகள்: உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

போட்டோஷூட்டுக்கு அனுமதி: மதுரை ரயில் நிலையம் அசத்தல் அறிவிப்பு!

அடுத்தடுத்து வரும் ஐசிசி தொடர்கள்: ஹாட்ஸ்டார் கொடுத்த கூல் அப்டேட்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *