2024-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 23) கோலாகலமாக துவங்கியது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லேன்னிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, மும்பை அணி பந்துவீச்சில் சிறப்பான துவக்கம் அளித்து டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான சபாலி வர்மாவின் விக்கெட்டை 3-வது ஓவரிலேயே கைப்பற்றியது.
ஆனால், மறுமுனையில் அவருடன் களமிறங்கிய கேப்டன் மெக் லேன்னிங் அடுத்து வந்த அலைஸ் கேப்ஸியுடன் ஜோடி சேர்ந்து, அணியின் எண்ணிக்கையை சீராக உயர்த்தினார்.
கேப்ஸி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, லேன்னிங் நிதானமாக விளையாடி 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின் 3-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அலைஸ் கேப்ஸி – ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துகளை பவுண்டரிக்கு பறக்கவிட, டெல்லி கேபிடல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தனர்.
கேப்ஸி 75 ரன்களுக்கும், ஜெமிமா 42 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மும்பை அணிக்காக அமீலியா கீர், நாட் சிவர்-பிரண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். wpl 2024 mi dc wickets
தொடர்ந்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு, மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான ஹேலி மேத்யூஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
என்றாலும் மறுமுனையில் களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
அடுத்து வந்த நாட் சிவர்-பிரண்ட் 19 ரன்களுக்கு வெளியேற, 3-வது விக்கெட்டிற்கு இணைந்த யாஸ்திகா பாட்டியா & கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இலக்கை நோக்கி ரன்களின் எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர்.
யாஸ்திகா 57 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த அமீலியா கீர் தனது பங்கிற்கு 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மறுபுறத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் களத்தில் தனது அதிரடியை தொடர்ந்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலைக்கு மும்பை சென்றது.
முதல் பந்தில் விக்கெட், 2 பந்தில் அமஞ்சோத் கவுர் 2 ரன்கள் எடுக்க, 3-வது பந்தில் 1 என ரன்களை சேர்க்க, 4-வது பந்திற்கு மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்த ஹர்மன்ப்ரீத், அந்த பந்தை பவுண்டரிக்கு விளாச, மும்பை அணிக்கு 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
A PERFECT FINISH…!!! 🔥
Sanjeevan Sajana with a 6 to finish when 5 needed in 1 ball. pic.twitter.com/JTya71aBp0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2024
5-வது பந்தை ஹர்மன்ப்ரீத் கவுர் சிக்ஸரை நோக்கித் தூக்கி அடிக்க, மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அது அனபெல் சுதர்லேண்ட் கையில் தஞ்சமடைந்தது.
இதைத்தொடர்ந்து 1 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்திற்கு வந்த எஸ் சஞ்சனா, அலைஸ் கேப்ஸி வீசிய அந்த கடைசி பந்தை சிக்ஸ் நோக்கி விளாச, மும்பை அணி முதல் போட்டியில் ஒரு த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 34 பந்துகளில் 55 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ‘ஆட்ட நாயகி’ விருதை வென்றார். wpl 2024 mi dc wickets
-மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரதமர் குறித்து அவதூறு: கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!
தந்தை மறைவு: நலத்திட்ட உதவியில் அமைச்சர் சாமிநாதன்