2024ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடர் பெங்களுருவில் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், முதல் போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, இந்த தொடரின் 3வது போட்டியில் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
டாஸ் எப்படி மும்பை அணிக்கு சாதகமாக அமைந்ததோ, பந்துவீச்சின் துவக்கமும் அவ்வாறே அமைந்தது. பவுலிங்கில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எதிர்பார்த்த துவக்கத்தை மும்பை அணிக்காக வழங்கினார், சப்னிம் இஸ்மாயில்.
முதல் ஓவரில் வேதா கிருஷ்ணமூர்த்தி, 3வது ஓவரில் ஹர்லீன் டியோல் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து, சூழல் மற்றும் வேகம் கலந்த மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய குஜராத் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுக்க துவங்கியது.
சப்னிம் இஸ்மாயிலை தொடர்ந்து, பார்ட்டியில் இணைந்த அமீலியா கீர், குஜராத் ஜெய்ன்ட்ஸ் வீராங்கனைகளின் விக்கெட்களை மளமளவென வீழ்த்தினார். இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்த குஜராத் அணி 126 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதிகபட்சமாக, தனுஜா கன்வர் 28 ரன்களை சேர்த்திருந்தார். அமீலியா கீர் 4 விக்கெட்களையும், சப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். WPL 2024 Mi beat GGT by 5 wicket
127 ரன்கள் என்ற எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியும், தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து பின்னடைவை சந்தித்தது.
ஆனால், 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமீலியா கீர், விக்கெட் வீழ்ச்சியை நிறுத்தி, அந்த விக்கெட்டிற்கு 66 ரன்களை சேர்த்தனர்.
இதன் காரணமாக, 19வது ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தனது வெற்றி நடையை தொடர்கிறது.
அந்த அணிக்காக, 46 ரன்கள் சேர்த்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடைசி வரை களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில், பந்துவீச்சில் மிரட்டி 4 விக்கெட்களை வீழ்த்தி, பேட்டிங்கிலும் அசத்தி 31 ரன்களை சேர்த்த அமீலியா கீர், ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அரிசி அப்பம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
WPL 2024 Mi beat GGT by 5 wicket