தனது 4வது போட்டியிலும் தொடர் தோல்வியை சந்தித்துள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. Delhi capitals hat-trick win
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 10வது போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் – குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (மார்ச் 3) இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக 6 பவுண்டரி, 1 சிக்சருடன் கேப்டன் மெக் லேனிங் அரைசதம் (55) அடித்தார். குஜராத் அணி தரப்பில் மேக்னா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியில் ஆஷ்லே கார்ட்னர் (40) தவிர மற்றவர்களில் ஒருவர் வீரர் கூட 15 ரன்களை தாண்டவில்லை.
இந்த சொதப்பலான பேட்டிங்கால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்த குஜராத் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கடைசி இடத்தில் குஜராத்
இந்த சீசனில் குஜராத் அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஒரு வெற்றியை பதிவு செய்யாத அணியாக உள்ளது. இதனால் புள்ளிப்பட்டிலில் நெகட்டிவ் ரன்ரேட்டுடன் கடைசி இடத்தில் உள்ளது.
அந்த அணியின் அரையிறுதி கனவு இறுகியுள்ள நிலையில், மீதமுள்ள 4 லீக் போட்டிகளில் அபார வெற்றியை பெற வேண்டியது அவசியமாகிறது. Delhi capitals hat-trick win
அதே வேளையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஏரிகளில் சரியும் தண்ணீர் இருப்பு : சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
துரைமுருகனை தொடர்பு கொண்ட வைகோ… வைகோவுக்கு எடப்பாடி தூது!