gurat giant won delhi capitals

டெல்லியை வீழ்த்தி குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றி!

விளையாட்டு

மகளிர் ஐபிஎல் போட்டியின் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு நடத்தி வருகிறது பிசிசிஐ.

மகளிர் ஐபிஎல் 2023 கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி லீக் சுற்றுகள் நடைபெறுகிறது.

பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற 5 அணிகளும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடி வருகிறது.

இந்நிலையில் நேற்று (மார்ச் 16) குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் லீக் சுற்றுப் போட்டி இரவு தொடங்கி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கிற்கு களமிறங்கிய குஜராத் அணியின் வீராங்கனைகள் சிறப்பான மற்றும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

இதன் காரணமாக 20 ஓவர் முடிவில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்திருந்தது. இதில், லாரா வோல்வார்ட் 57 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 51 ரன்களும் எடுத்திருந்தனர்.

இதனால் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

ஆனால் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் அபாரமான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத டெல்லி அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 18 ரன்களும் ஆலிஸ் கேப்ஸி 22 ரன்களும் மரிசான் கேப் 36 ரன்களும் அருந்ததி ரெட்டி 25 ரன்களும் எடுத்திருக்க மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் கிம் கார்த், தனுஜா கன்வர் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும் சினே ராணா மற்றும் ஹர்லீன் தியோல் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் அணிகளின் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கின்றது.

ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கின்றது.

பிளே ஆஃப் சுற்றுக்குப் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள் தான் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கம்பு – பாலக் கீரை வடாகம்

wpl 2023 gujarat giant won
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *