ஆறு அடி உயரத்தில் 154 கிலோ எடையுடன் பாடி பில்டிங் உலகத்தில் ஆஜானுபாகுவாக வலம் வந்தவர் இலியா யாஃபி மிச்சிக். 36 வயதான இவர் இப்போது உயிருடன் இல்லை என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், நம்பிதான் ஆக வேண்டும்.
ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரை இழந்துள்ளார் பெலாராஸ் நாட்டை சேர்ந்த இந்த பாடி பில்டர். கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக , அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும், அவரின் உடல் கோமா நிலைக்கு சென்று விட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 11 ஆம் தேதி அவர் உயிரிழந்து போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரின் மனைவி அன்னா கூறுகையில், உடல் நிலை பாதிக்கப்பட்டதில் இருந்து அவருடன் இருந்து நான் பார்த்து கொண்டேன். கடவுளிடம் என் கணவரை மீட்டு கொடுத்து விடு என்று மன்றாடினேன். ஆனால், பலன் கிடைக்காமல் போய் விட்டது என்று வேதனையுடன் பெலாரஸ் மீடியாக்களிடம் தெரிவித்துள்ளார்.
இலியா யாஃபி மிச்சிக் நாள் ஒன்றுக்கு 16.5 ஆயிரம் கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வார். இதில், 2.5 கிலோ மாமிச உணவுகளும் அடக்கம். பள்ளி காலத்தில் 70 கிலோ எடை கொண்டிருந்த அவரால் ஒரு புஷ்அப் கூட எடுக்க முடியாது.
சோம்பேறியாக திரிந்த அவர் ஒரு கட்டத்தில் அர்னால்ட் , சில்வஸ்டர் ஸ்டோலன் போன்றவர்களை ரோல் மாடலாக கொண்டு பாடி பில்டிங்கில் ஈடுபட தொடங்கினார். பின்னர், படிப்படியாக உலகின் மிக வலிமையான பாடி பில்டராக மாறினார். ஆனாலும் , இளம் வயதிலேயே காலன் அவரின் உயிரை பறித்து விட்டதுதான் சோகத்திலும் சோகம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சென்னையில் நேற்று இரவு பவர்கட்… தங்கம் தென்னரசு விளக்கம்!
அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைப்பதா? – கொந்தளித்த கனிமொழி, ஜோதிமணி