WorldCupFinal2023: கப்புக்கு அந்த பக்கம் நிக்குறவங்க தான் ஜெயிப்பாங்க… ரசிகர்கள் சண்டை!

தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில் 4 ரன்களிலும்,கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும், கோலி 54 ரன்களிலும்  ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

31 ஓவர்கள் முடிவில் கே.எல்.ராகுல் 43 ரன்களுடனும், ஜடேஜா 3  ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். இந்திய அணி 158 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் போட்டியை யார் வெல்வார்கள் என்று கேப்டன்கள் உலகக்கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ராசியை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சண்டை போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இதற்கு முன்னர் ஐசிசி இறுதிப்போட்டிகளில் கோப்பைக்கு இடது புறம் நின்று போஸ் கொடுக்கும் கேப்டன் தான் ஜெயித்து இருக்கிறார்கள் என ஒரு தரப்பினர் புள்ளி விவரங்களுடன் போஸ்ட் போட்டுள்ளனர். இதை வைத்து பார்த்தால் ரோஹித் இந்த கப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

திருமணம் செய்திருந்தால் வெற்றி!

மறுபுறமோ இல்லை உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னர் திருமணம் செய்த கேப்டன்கள் தான் உலகக்கோப்பையை வென்றுள்ளனர் என்று ஆதாரங்கள் காட்டுகின்றனர். அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் 2010-ம் ஆண்டு தோனி திருமணம் செய்தார். 2011-ல் உலகக்கோப்பையை வென்றார். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் திருமணம் செய்தார். 2015-ம் ஆண்டு அவர் கோப்பையை வென்றார். 2018-ம் ஆண்டு இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் திருமணம் செய்தார். 2019-ம் ஆண்டு கோப்பையை வென்றார்.

அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் திருமணம் செய்துள்ளார். அதன்படி பார்த்தால் இந்த 2023-ம் ஆண்டு கோப்பையை அவர் தான் வெல்லப்போகிறார் என பதிலுக்கு எதிர் சேவல் விடுகின்றனர். இதில் எந்த ராசி வெல்லப்போகிறது? என்பது இன்று இரவு தெரிந்து விடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

INDvsAusFinal: மைதானத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்… பதற்றமடைந்த கோலி

WorldCupFinal2023: கபில்தேவ், தோனிக்கும் உலகக்கோப்பையில இதான் நடந்துச்சு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts