WorldCupFinal2023: ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 241

விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப்போட்டி தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன.

சுப்மன் கில் (4) ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் (4) ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா (47) ரன்களிலும் அவுட் ஆகினர். நன்றாக ஆடிய கிங் கோலி (54) ரன்களில் அவுட் ஆகி மைதானம் முழுவதும் உள்ள ரசிகர்களை உறைந்து போக செய்தார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுலும் 66 ரன்களில் அவுட் ஆகி தன்னுடைய பங்கிற்கு ஒரு அதிர்ச்சியை அளித்தார்.

தொடர்ந்து ஜடேஜா 9 ரன்னிலும், ஷமி 6 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் உள்ளே வந்த பும்ரா 1 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி சென்றார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 18 ரன்களுக்கு அவுட் ஆக இந்திய ரசிகர்களின் நம்பிக்கை ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்தது.

எனினும் கடைசி கட்டத்தில் குல்தீப்பின் 10 ரன்கள், சிராஜின் 9 ரன்களால் 50 ஓவர்களுக்கு 240 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு தற்போது 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இந்த இலக்கை எட்டி கோப்பையை வெல்லுமா? என்பதை பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

ICC WorldCup Final: மோடி மைதானத்தில் கெத்து காட்டிய ராகுல் அவுட்… சைலன்ட் மோடில் ரசிகர்கள்!

அம்பயர் ஆகிறார் ஆளுநர் ரவி… உலகக்கோப்பையில் திருப்பம்: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *