WorldCupFinal2023: கபில்தேவ், தோனிக்கும் உலகக்கோப்பையில இதான் நடந்துச்சு!

Published On:

| By Manjula

தற்போது (நவம்பர் 19)  அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் சுப்மன் கில் 4 ரன்களிலும், கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

கோலி(35), கே.எல்.ராகுல்(16) இருவரும் களத்தில் இருக்கின்றனர். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 109 ரன்களை எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு சாதகமான புள்ளி விவரம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. 1983, 2011 என இதற்கு முன் இந்திய அணி கோப்பை வென்ற இரண்டு முறையுமே, இந்திய கேப்டன்களான கபில்தேவ், தோனி இருவருமே டாஸில் தோற்று, கோப்பையை வென்றனர்.

https://twitter.com/mufaddal_vohra/status/1726153572059058654

அதேபோல இந்த முறையும் கேப்டன் ரோஹித் சர்மா டாஸில் தோற்று இருக்கிறார். கபில்தேவ், தோனி போல அவரும் கோப்பையை வெல்வாரா? என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம். மறுபுறம் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டியின் போதும் ரோஹித் 47 ரன்களில் அவுட் ஆனார். அந்த போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

WorldCup Final: இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கம்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி: வீட்டில் குடும்பத்துடன் காணும் முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.