இன்று (நவம்பர் 19) மதியம் 2 மணிக்கு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதுகின்றன. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் இந்த போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.
இதில் எந்த அணி போட்டியை வென்று கோப்பையை கையில் ஏந்தப்போகிறது என்பது மிகுந்த திரில் அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடவிருக்கிறது.
வெற்றி-வாய்ப்பு ஓரளவு சரிசமமாக இருப்பதால் டாஸ் இந்த மைதானத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அதே நேரம் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் ஆவரேஜ் ஸ்கோர் இங்கு 280 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ஆளுநர் டெல்லி பயணம்: காரணம் இதுதான்!