ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மாற்று வீரர் ஒருவரை ரோஹித் சர்மா களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. WorldCup2023 ashwin play against Australia
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
மறுபுறம் தட்டு தடுமாறி உள்ளே வந்த ஆஸ்திரேலியா அணி அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.
வருகின்ற நவம்பர் 19-ம் தேதி இரண்டு அணிகளும் 20 வருடங்களுக்கு பின் நேருக்கு நேராக அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு மோதவுள்ளன.
நியூசிலாந்து அணியுடனான நாக் அவுட் பகையை சமீபத்தில் தீர்த்துக்கொண்ட இந்திய அணி, அடுத்ததாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா உடனான 20 வருட பகையை தீர்த்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் ஒரு சிறிய மாற்றம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி மிடில் ஆர்டரில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை உள்ளே கொண்டு வர ரோஹித் தலைமையிலான இந்திய அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் சுற்றில் அஸ்வின் அணியில் இடம் பிடித்திருந்தார். அந்த போட்டியில் 1 மெய்டன் ஓவருடன் 10 ஓவர்கள் வீசி 34 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. என்றாலும் அணிக்கு ஆலோசனைகள் வழங்குவது, மைதானத்துக்குள் குளிர்பானங்கள எடுத்து செல்வது போன்ற விஷயங்களை அவர் ஆர்வமுடன் செய்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வினின் அனுபவம் கைகொடுக்கும் என நினைக்கும் இந்திய அணி பெரிதாக ரன்கள் எதுவும் குவிக்காத சூர்யகுமார் யாதவை பெஞ்சில் அமரவைத்து விட்டு அஸ்வினை களத்தில் இறக்க முடிவெடுத்து இருக்கிறதாம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து தடுமாறுவதால் இந்த முறை அஸ்வின் நிச்சயம் ஆடும் அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அஸ்வின் உள்ளே வந்தால் குல்தீப் யாதவ்-அஸ்வின் கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும். WorldCup2023 ashwin play against Australia
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
அண்ணா பல்கலை தேர்வு கட்டணம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது: பொன்முடி
செந்தில் பாலாஜி உடல்நிலை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை!
உலக கோப்பையை வெல்வது எப்படி?: இந்திய அணிக்கு சத்குரு டிப்ஸ்!