இலங்கை கிரிக்கெட் அழிவதற்கு காரணம் ஜெய்ஷா: முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

விளையாட்டு

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அழிய காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தன்னுடைய மோசமான செயல்பாடுகளால் 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி சரியாக செயல்படவில்லை என்று கூறி சமீபத்தில் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது.

தொடர் தோல்விகளால் சாம்பியன் டிராபி கோப்பைக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியாமல் போய் விட்டது. மேலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசின் தலையீடு இருப்பதாக கூறி, ஐசிசியில் இருந்தும் தற்காலிகமாக இலங்கை அணி நீக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் வாரியம் இப்படி ஆவதற்கு காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், “இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்துவதே ஜெய்ஷா தான். அவர் கொடுக்கும் அழுத்தத்தால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அழிந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு நபர் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்தி வருகிறார்.

இங்குள்ள சில கிரிக்கெட் நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதால் ஜெய்ஷாவும், பிசிசிஐயும் இலங்கை கிரிக்கெட்டை கட்டுப்படுத்தி தாங்கள் சொல்லும்படி நடக்க வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

ஜெய்ஷா இவ்வளவு சக்தி வாய்ந்த நபராக இருப்பதற்கு அவரது தந்தை அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக இருப்பதும் முக்கிய காரணம்” என கருத்து தெரிவித்துள்ளார். அர்ஜுனா ரணதுங்காவின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரங்களில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

போதை கலாச்சாரத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி: டிடிவி வலியுறுத்தல்!

ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி: டீன் அதிரடி உத்தரவு!

+1
0
+1
2
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *