harbhajan comment about anushka and athiya

அனுஷ்கா சர்ச்சையை திசை திருப்ப ஹர்பஜன் வீசிய ‘ஆஸ்திரேலிய’ பந்து!

விளையாட்டு

கோலியின் மனைவி அனுஷ்கா, ராகுலின் மனைவி அதியா குறித்து ஹர்பஜன் சிங் சொன்ன கருத்து சமூக வலைதளங்களில் பெரும் புயலை உருவாக்கி இருக்கிறது. harbhajan comment about anushka and athiya

கடந்த நவம்பர் 19-ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் மோதின. அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 6-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது.

போட்டி நடைபெற்ற போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்தியில் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அப்போது கோலியும், ராகுலும் களத்தில் இருந்தனர்.

போட்டியை பார்த்து கொண்டிருந்த அனுஷ்கா சர்மா, அதியா ஷெட்டி இருவரும் தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டு இருக்க, கேமரா அவர்கள் பக்கம் திரும்பியது.

இதைப்பார்த்த ஹர்பஜன் சிங், ”அனுஷ்கா சர்மா, அதியா ஷெட்டிக்கு இடையேயான உரையாடல் கிரிக்கெட் பற்றியா அல்லது திரைப்படங்களை பற்றியா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

ஏனென்றால், அவர்களுக்கு கிரிக்கெட்டைப் பற்றி எந்த அளவுக்குப் புரிதல் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார்.

அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ,

இதைப்பார்த்த ரசிகர்கள் ஹர்பஜன் சிங் பேசியது தவறு தன்னுடைய இந்த பேச்சுக்கு அவர் கண்டிப்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

அதே நேரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரை சமூக தளங்களில் கேலி செய்யும் போக்கு குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் ஹர்பஜன்.

அதில், ” ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கிண்டல் செய்வது மிகவும் மோசமானது.

நாம் மிகவும் நன்றாக விளையாடினோம் என்றாலும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் சிறந்த ஆட்டத்தால் தோல்வி அடைந்தோம். அவ்வளவு தான்.

கிரிக்கெட் வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் ஏன் கிண்டலடிக்க வேண்டும்?,

இதுபோன்ற விஷயங்களை நிறுத்தும்படி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கேட்டு கொள்கிறேன். நல்லறிவும், கண்ணியமும் மிகவும் முக்கியமாகும்,” என தெரிவித்து இருக்கிறார்.

அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்க பேசினதுக்கு மொதல்ல மன்னிப்பு கேளுங்க என, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். harbhajan comment about anushka and athiya

அனுஷ்கா, அதியா பற்றி தான் சொன்னது சர்ச்சையாகிக் கொண்டிருக்க, அதுபற்றி கவலைப்படாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் குடும்பம் பற்றி கவலைப்படுகிறாராரே ஹர்பஜன் என்று இதையும் சமூக தளத்தில் விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

மாற்றுத்திறனாளிகளிடம் வருத்தம் தெரிவித்த தங்கம் தென்னரசு

அதிமுகவின் 40 எம்எல்ஏ-க்கள் திமுகவுக்கு வர ரெடியாக இருந்தனர்: அப்பாவு

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *