உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐசிசி சர்வதேச ஒருநாள் உலகக்கோப்பை போட்டி இன்று(அக்டோபர் 5) தொடங்கியுள்ளது.
குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதி வருகின்றன.
கடந்த உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு இங்கிலாந்தை பழிவாங்கும் நியூசிலாந்தின் அதிரடியான ஆட்டமாகவே இந்த தொடக்க ஆட்டம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் உலகக்கோப்பை முதல் போட்டியிலேயே முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாதது இரு அணிகளுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும், நியூசிலாந்து அணியில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான டிம் சவுதியும் தொடக்க ஆட்டத்தில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டாம் லதாம் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிறகு 112 ரன்கள் குவித்து தொடர்ந்து விளையாடி வருகிறது.
நியூசிலாந்து அணி தரப்பில் பெளல்ட், சாண்ட்னர், நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தங்கலான் மிக சவாலான படம்”: மாளவிகா மோகனன் பதில்!
2024 தேர்தல்… பாஜக vs திமுக தான்: அண்ணாமலை
தெற்கே தேஜகூவுக்கு அடுத்த அடி: அதிமுகவைத் தொடர்ந்து ஜனசேனாவும் விலகல்!