உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கே? எப்போது?: ஐசிசி அறிவிப்பு!

Published On:

| By Kavi

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒருநாள் & டி20 உலகக்கோப்பைகளுக்கு நிகரான எதிர்பார்ப்பை பெற்றிருருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டி எங்கே, எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்துள்ளது.

அதன்படி, ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலேயே இம்முறை இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டி, 2025 ஜூன் 11 துவங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது. ஒருவேளை, இந்த 5 நாட்களில் மழை குறுக்கிட்டு ஆட்டம் பாதிக்கப்பட்டால், போட்டி ரிசர்வ் நாளான ஜூன் 16 அன்றும் தொடரும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2019-இல் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கப்பட்ட நிலையில், இதுவரை நடைபெற்ற 2 இறுதிப்போட்டிகளுக்கும் இந்தியா தகுதி பெற்றாலும், ஒருமுறை கூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதன் காரணமாக இம்முறையானது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுதியாக உள்ளது.

தற்போது உள்ள நிலவரப்படி, 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 68.52% புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

62.5% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்தில் உள்ளது. 50.0% புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 3வது இடத்தில் உள்ளது.

மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக அந்த நாட்டின் சொந்த மண்ணிலேயே ஒரு வரலாறு வெற்றியை பெற்ற வங்கதேச அணி, 45.83% புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இப்படியான சூழலில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

அந்தப் போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவல்துறை, வங்கி, ஐடி …. எல்லா இடத்திலும் நடக்கிறது: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து சரத்குமார் பேட்டி!

ஈசிஆரில் கோர விபத்து: உடல் நசுங்கி 4 பேர் பலி!

வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வேயில் பணி!

பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை: நிறைவேறிய மசோதா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share