இந்திய மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் (150) விளையாடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது.
வருகின்ற 26 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய மகளிர் அணி இன்று(பிப்ரவரி 20) தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணியுடன் விளையாடுகிறது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு க்கெபெர்ஹா ,செயின்ட் ஜார்ஜ் பூங்கா மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் (150) விளையாடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையையும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத், “இது மிகப் பெரியதாக உணர்கிறேன்.
எனது அணியில் இருந்து உணர்ச்சிகரமான வாழ்த்துகளை பெற்றேன். பிசிசிஐ, ஐசிசிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இன்னும் அதிகமான போட்டிகள் விளையாட உள்ளோம் என்றார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்கள் விளையாடியவர்கள், 1. ஹர்மன்ப்ரீத் – 150 போட்டிகள், 2. ரோஹித் சர்மா- 148 போட்டிகள், 3. சுசி பேட்ஸ்(நியூசிலாந்து) – 143 போட்டிகள்.
ரன் எண்ணிக்கையிலும் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
டி20 போட்டிகளில் 3000 ரன்களை கடந்த உலகின் நான்காவது மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கலை.ரா
மீண்டும் வந்த எய்ம்ஸ் செங்கல்: பாஜகவை கலாய்த்த அமைச்சர் உதயநிதி
புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்கள்: ஆந்திராவில் பரபரப்பு!