13 வது உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தேதி தொடங்கி நவம்பர் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.
இதில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. அதன்படி மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தை சந்திப்பவராக இருந்து வருவதால் அவரை நினைத்து கவலை அடைவதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கபில் தேவ் ABP News சேனலுக்கு நேற்று பேட்டியளித்துள்ளார்.
அதில்,” காயம் என்பது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்விலும் ஒரு பகுதி.
இருப்பினும் தற்போதைய இந்திய அணியின் நிலைமை முன்னேறும் என்று நான் நம்புகிறேன்.
அதே சமயம் ஹர்திக் பாண்டியாவை நினைத்து நான் எப்போதுமே பயப்படுகிறேன். ஏனெனில் அவர் அடிக்கடி காயத்தை சந்திக்கும் ஒரு வீரராகவே இருக்கிறார்.
எனவே ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் ஃபிட்டாக இருந்தால் தான் இந்திய அணி ஒரு சிறந்த அணியாக மாற முடியும்.
இதை நான் எதற்காக சொல்கிறேன் என்றால் உலகக்கோப்பை என்பது ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் வரும். அதில் நாம் வெற்றி அடைய தயாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே ஏற்கனவே இந்திய அணியின் அதிரடி வீரர்களான பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் காயத்தால் அணியில் இருந்து விலகி ஓய்வில் உள்ளனர்.
சூழல் இப்படி இருக்கும் பொழுது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா குறித்து கபில் தேவ் கவலை தெரிவித்திருப்பது நியாயம் தான் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதோடு மட்டும் இன்றி இந்திய அணியின் வீரர்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாட்சப் டிபி: மகளிர் ஆணைய தலைவிக்கு குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர் கண்டனம்!
மணிப்பூருக்கு சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்!