உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் ரூர்கேலாவில் வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 42 வருட இடைவெளிக்குப் பிறகு 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நடத்துகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவருகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமான மூலம் ஹாக்கி கோப்பை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் ஹாக்கி கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார்.
அதன்பின் சென்னை விமான நிலையத்திலிருந்து, வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் ஹாக்கி விளையாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் உலக கோப்பையை காண்பித்தனர். அவர்களை முதல்வர் வாழ்த்தினார்.
அதோடு சென்னையில் பல்வேறு இடங்களில் ஹாக்கி உலக கோப்பை காட்சிப்படுத்தப்பட உள்ளது. இறுதியாக வேறு மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கலைஞர் அமைத்த தமிழிசை மண்டபம்: கவனம் செலுத்துவாரா ஸ்டாலின்?
தனுஷ் முதல் நயன்தாரா வரை! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள் !