சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று (நவம்பர் 19) நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை மக்கள் காண்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இன்று நடைபெறும் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. போட்டி தொடங்குவதற்கு இன்னும் சிறிது நேரமே உள்ளதால் ரசிகர்கள் நரேந்திர மோடி மைதானத்திற்கு வெளியில் சூழ்ந்துள்ளனர்.
இந்திய அணி 3வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பெருநகரங்களில் பெரிய அளவிலான திரைகள் அமைக்கப்பட்டு உலகக் கோப்பை போட்டியை ரசிகர்களுக்கு திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பெரிய எல்.இ.டி ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைந்துள்ள பகுதியில் ஸ்கிரீன் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியை மாற்றுத்திறனாளிகளும் கடற்கரைக்கு சென்று காண முடியும்.
தற்போது கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பெரிய ஸ்கிரீன்களில் அமர்ந்து போட்டியைக் காண்பதற்கு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ரசிகர்களின் இத்தனை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்தியா கோப்பையை வென்றால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை மறக்க முடியாத ஒன்றாக ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
BiggBossDay48: மாயா-பூர்ணிமா கூட்டணியில் விழுந்த ஓட்டை… போட்டியாளர்களிடம் படாதபாடு பட்ட மரியாதை!
முதல்வரின் கிருஷ்ணகிரி பயணம் திடீர் ரத்து!