உலக கோப்பை நடுவர்கள் அறிவிப்பு: ரசிகர்கள் ஷாக்!

Published On:

| By Selvam

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நவம்பர் 19-ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

https://twitter.com/1m_lucifer45/status/1725490137713496131?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1725490137713496131%7Ctwgr%5E11ec4ac4874ae4f00e2a364dea9342a599ff4441%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fcricket%2Findia-vs-australia-cricket-world-cup-2023-final-indian-fans-react-as-umpire-richard-kettleborough-richard-illingworth-set-to-officiate-in-ind-vs-aus-final-of-cwc-2023-heres-why-they-are-unhappy-2689215.html

கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பை போட்டியில் நடுவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் கெட்டில்பரோ, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், மூன்றாவது நடுவராக ஜோயல் வில்சன், போட்டி நடுவராக அண்டி பைகிராப்ட் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்தபோது நடுவராக இருந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக நியமிக்கப்பட்டது இந்திய ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக 2014 உலக கோப்பை இறுதிப்போட்டி, 2015,2016,2019 உலக கோப்பை அரையிறுதி போட்டி, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபோது ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக செயல்பட்டுள்ளார்.

2019-ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியின் போது கேப்டன் தோனி அவுட்டானதும் ரிச்சட்ர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்‌ஷன் இன்றளவும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. இதனால் அவர் குறித்து இந்திய ரசிகர்கள் பலரும் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரயில்வே போர்டு உறுப்பினர் பயணிக்க தனி ரயிலா? – சு.வெங்கடேசன் கேள்வி!

Election2023: ம.பி, சத்தீஸ்கர்: மதியம் வரை வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel