பர்த்டே ட்ரீட்: சச்சின் சாதனையை சமன் செய்த கோலி

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி  தன்னுடைய 49வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

உலகக்கோப்பை லீக் சுற்றில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி தற்போது கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 40 ரன்களிலும், ஷூப்மன் கில் 23 ரன்களிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களிலும், கே.எல்.ராகுல் 8 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கோலி தன்னுடைய 49-வது சதத்தினை 119 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் பூர்த்தி செய்தார். தன்னுடைய பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய ட்ரீட்டினை அவர் அளித்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகளில் இதற்கு முன்னர் பிறந்த நாளில் பாகிஸ்தானுக்கு எதிராக ராஸ் டெய்ர் (131) 2011-ம் ஆண்டிலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ்(121) 2023-ம் ஆண்டிலும் சதமடித்து உள்ளனர். தற்போது விராட் கோலியும் (101) பிறந்தநாளில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

காய்ச்சலிலும் காணொளியில் வந்த ஸ்டாலின்

நாய்க்கறி உண்பவர்களா?: ஆர்.எஸ்.பாரதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0