உலக பேட்மின்டன்: பி.வி. சிந்து விலக உண்மை காரணம் என்ன?

விளையாட்டு

டோக்கியாவில் நடைபெற இருக்கும் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்  கடினமான போட்டியை பி.வி.சிந்து எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உலக பேட்மின்டனில் இருந்து விலகுவதாக பி.வி.சிந்து ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது பலரை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.

27ஆவது உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் மோதல் அட்டவணை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து கடினமான பிரிவில் இடம்பெற்றுள்ளார்.

நேரடியாக இரண்டாவது சுற்றில் களம் காணும் அவர் ஆசிய விளையாட்டு சாம்பியனான வாங் ஸி யியை (சீனா) எதிர்கொள்கிறார்.

இந்தத் தடையை சிந்து கடந்தால் மூன்றாவது சுற்றில் சூப்பர் பார்மில் உள்ள அன் சி யங்குடன் (தென் கொரியா) மோத வேண்டி வரலாம். அன் சி யங்குக்கு எதிராக இதுவரை ஆடியுள்ள ஐந்து ஆட்டங்களிலும் சிந்து தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக சிந்து ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளளார்.

அதில், ‘சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றேன். இந்தத் தொடரின்போது காயத்தால் அவதிப்பட்டேன். ஆனால் அதை சமாளித்துத்தான் வெற்றி பெற்றேன். இறுதிப்போட்டியின்போது வலி அதிகமாக இருந்தது.

ஹைதராபாத் திரும்பியதும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தேன். இதில் இடது கால் பாதத்தில் அழுத்தத்தால் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சில வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் துரதிருஷ்டவசமாக உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலக வேண்டியதாகி விட்டது’ என்று கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு  பலரை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ஒலிம்பிக்கில் இரு பதக்கங்கள் வென்றவரான 27 வயதான சிந்து 2019ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

‘மிஸ் யூ மஹி’ தோனி ஓய்வு பெற்ற நாள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.