மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?

விளையாட்டு

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றிருந்தது.

இந்நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள், அபு தாபியில் கடந்த ஏப்ரல் 25 துவங்கி நடைபெற்றுவருகிறது.

இந்த தகுதிச்சுற்று ஆட்டங்களில், இலங்கை, ஸ்காட்லாந்து, தாய்லாந்து, உகாண்டா, அமெரிக்கா, அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் வனாடு உள்ளிட்ட 10 நாடுகள் மோதிக்கொண்டன.

இந்நிலையில், தற்போது இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய 2 அணிகள் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த இரண்டு அணிகள் இடையே, முதல் 2 இடங்களை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மே 7 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றும் வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா ஆகியோருடன் இணைந்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, 2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

இந்த தொடரில் விளையாடவுள்ள 10 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, குவாலிஃபையர் 1 உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், குவாலிஃபையர் 2 ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

அக்டோபர் 3 அன்று துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொள்கின்றன.

அக்டோபர் 4 அன்று இந்தியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்த்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் அக்டோபர் 6 அன்று நடைபெறவுள்ளது.

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை

அக்டோபர் 3: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, டாக்கா

அக்டோபர் 3: வங்கதேசம் vs குவாலிஃபையர் 2, டாக்கா

அக்டோபர் 4: ஆஸ்திரேலியா vs குவாலிஃபையர் 1, சில்ஹெட்

அக்டோபர் 4: இந்தியா vs நியூசிலாந்து, சில்ஹெட்

அக்டோபர் 5: தென்னாப்பிரிக்கா vs மேற்கிந்திய தீவுகள், டாக்கா

அக்டோபர் 5: வங்கதேசம் vs இங்கிலாந்து, டாக்கா

அக்டோபர் 6: நியூசிலாந்து vs குவாலிஃபையர் 1, சில்ஹெட்

அக்டோபர் 6: இந்தியா vs பாகிஸ்தான், சில்ஹெட்

அக்டோபர் 7: மேற்கிந்தியத் தீவுகள் vs குவாலிஃபையர் 2, டாக்கா

அக்டோபர் 8: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், சில்ஹெட்

அக்டோபர் 9: வங்கதேசம் vs மேற்கிந்திய தீவுகள், டாக்கா

அக்டோபர் 9: இந்தியா vs குவாலிஃபையர் 1, சில்ஹெட்

அக்டோபர் 10: தென்னாப்பிரிக்கா vs குவாலிஃபையர் 2, டாக்கா

அக்டோபர் 11: ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, சில்ஹெட்

அக்டோபர் 11: பாகிஸ்தான் v குவாலிஃபையர் 1, சில்ஹெட்

அக்டோபர் 12: இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள், டாக்கா

அக்டோபர் 12: வங்கதேசம் vs தென்னாப்பிரிக்கா, டாக்கா

அக்டோபர் 13: பாகிஸ்தான் vs நியூசிலாந்து, சில்ஹெட்

அக்டோபர் 13: இந்தியா vs ஆஸ்திரேலியா, சில்ஹெட்

அக்டோபர் 14: இங்கிலாந்து vs குவாலிஃபையர் 2, டாக்கா

*அக்டோபர் 17: முதல் அரையிறுதி, சில்ஹெட்

அக்டோபர் 18: 2வது அரையிறுதி, டாக்கா

அக்டோபர் 20: இறுதிப்போட்டி, டாக்கா*

இந்த தொடரில், அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ‘ரிசர்வ் டே’ உள்ளது என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய மசாலா பொருட்களில் 10 மடங்கு அதிக பூச்சிக்கொல்லியா?

முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *