பெண்கள் கால்பந்து போட்டி: தமிழ்நாடு சாம்பியன்!

Published On:

| By Jegadeesh

தேசிய அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இன்று (ஜூன்28) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி தொடங்கிய தேசிய அளவிலான சீனியர் பெண்கள் கால்பந்து போட்டியில் முதல் சுற்று லீக் ஆட்டங்களில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி தமிழ்நாடு பெண்கள் அணி ஒன்பது புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது லீக் சுற்றில் ஏ பிரிவில் இடம்பெற்ற தமிழ்நாடு பெண்கள் அணி 15 புள்ளிகளுடன் தங்களுடன் மோதிய ஒடிசா, சண்டிகர், ஜார்க்கண்ட் , பஞ்சாப் மற்றும் கர்நாடகா அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஹரியானா அணிக்கு எதிராக இன்று (ஜூன் 28) நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தங்கள் வசப்படுத்தியுள்ளது.

இதில் தமிழ்நாடு பெண்கள் அணி வீராங்கனை பிரியதர்ஷினி 57 வது நிமிடத்தில் ஒரு கோலும், இந்துமதி 83 வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை!

குண்டர் சட்ட அதிகாரம்: மதுரை கிளை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share