மகளிர் ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா!

Published On:

| By Monisha

மகளிர் ஆசியக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்களில் வெற்றி பெற்றது.

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய (அக்டோபர் 7) போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி இன்று (அக்டோபர் 8) வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இருவருமே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

6 ஓவர் இறுதியில் இந்த இணை 8 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 61 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா எதிர்பாராத விதமாக 47 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஷபாலியுடன் இணைந்தார். 40 பந்துகளில் ஷபாலி அரைசதம் எடுத்து அசத்தினார்.

14.5 ஆவது ஓவரில் 55 ரன்கள் எடுத்து ஷபாலி ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் சேர்ந்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துள்ளது.

மோனிஷா

ஒருநாள் போட்டி: தீபக் சாஹருக்கு பதில் விளையாடபோவது யார்?

விபத்தில் ஹாட்ரிக் அடித்த ’வந்தே பாரத்’ ரயில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel