வங்காளதேசத்தில் ஏழு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் ஆசியக் கோப்பை பெண்கள் டி 20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில், இன்று (அக்டோபர் 3 ) நடைபெற்ற போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் மலேசிய அணியும் மோதின.
டாஸ் வென்ற மலேசிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது.
மேகனா 69 ரன்களும், ஷபாலி 46 ரன்களும், ரிச்சா கோஷ் 33 ரன்களும் எடுத்தனர். பின்னர், 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மலேசிய அணி களமிறங்கியது.
5.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 16 ரன்களை எடுத்திருந்தது.
அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி, நாளை (அக்டோபர் 4) ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முத்துராமலிங்கர் தங்கக்கவசம் யாருக்கு?: எடப்பாடி -பன்னீர் மோதல்!
அனில் சவுகானுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு