பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கப்பட்ட சம்பவம் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, தாய்நாடு திரும்பியுள்ள வினேஷ் ஹரியானாவில் சொந்த ஊரான பலாலியில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், வினேஷ் போகத்தை தங்கள் பக்கம் இழுக்க பல அரசியல் கட்சிகள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற முடியாத சோகத்துடன் தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லி விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
ஹரியானா மாநில எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சி தலைவருமான தீபேந்திர சிங் ஹூடா தலைமையில்தான் வினேசுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது
அதோடு, வரும் ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத்துக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே, வினேசுக்கு ராஜ்யசபா எம்.பி பதவி அளிக்கவும் காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதாக தீபேந்திர சிங் ஹூடா அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பபிதா போகத் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பபிதா போகத் தாத்ரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
பபிதா போகத் போன்ற ஒரு பிரபலம் தங்கள் கட்சிக்கு தேவை என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதனால், பபிதா போகத்துக்கு எதிராக வினேஷ் போகத் களமிறக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேசுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பபிதா போகத் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். பின்னர், அரசியல் அழுத்தம் காரணமாக பபிதா வாபஸ் வாங்கியதாக தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
Share Market : இரட்டை இலக்க லாபத்தை பதிவு செய்த முருகப்பா குழுமம்!
2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லையா?