Wimbledon: Alcaraz makes history

விம்பிள்டன்: சரித்திரம் படைத்த அல்காரஸ்

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவை ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள்.

இந்த போட்டிகள் அனைத்தும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும். இந்த நான்கு வகையான போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி தொடங்கியது.

அதன்படி நேற்று (ஜூலை 16) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், டென்னிஸ் தரவரிசை பட்டியலில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்ற முறையில் எளிதில் கைப்பற்ற சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார்.

 

மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.

இறுதியில், 20 வயதே ஆன அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கலைஞர் நூற்றாண்டு நூலகம்! தி.மு.க என்ற அறிவியக்கத்தின் அடையாளம்!

டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts