கோலியின் 9 ஆண்டுகால சாதனையை முறியடித்த வில்லியம்சன்

Published On:

| By christopher

Williamson breaks Kohli record

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று (பிப்ரவரி 10) அதிரடி சதத்தை பதிவு செய்த வில்லியம்சன், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். Williamson breaks Kohli record

சாம்பியன் டிராபி தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

பாகிஸ்தான் லாகூரில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து அணி. தொடர்ந்து இன்று அதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

அறிமுகப் போட்டியில் சாதனை! Williamson breaks Kohli record

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது. அதில் அறிமுகமான தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே அதிக ரன்கள் (150) குவித்து குவித்து சாதனை படைத்தார் மேத்யூ பிரீட்ஸ்கே.

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர் வில் யங் வெறும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த டெவோன் கான்வே மற்றும் மூத்த வீரர் கேன் வில்லியம்சன் ஜோடி 187 ரன்கள் குவித்தது.

கான்வே நூழிலையில் சதத்தை (97) தவறவிட்ட நிலையில், வில்லியம்சன் தனது 14வது சதத்துடன் (133) கடைசி வரை ஆட்டமிழக்கமால் வெற்றியை உறுதி செய்தார். 48.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்த நிலையில், த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்தத் தொடரின் கடைசிப் போட்டி கராச்சியில் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் வெற்றி பெறும் அணி, பிப்ரவரி 14 அன்று இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கும்.

7000 ரன்களை கடந்த வில்லியம்சன்

இந்த போட்டியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்த வில்லியம்சன், 133வது ரன்னை இன்று எடுத்தபோது, ஒருநாள் போட்டியில் 7000 ரன்களை அதிவேகமாக எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார்.

151 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை எட்டிய ஹஷிம் அம்லா இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நிலையில், கேன் வில்லியம்சன் 159 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

விராட் கோலி 161 இன்னிங்ஸ்களில் 7000 ஒருநாள் போட்டி ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share