இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் மூன்று 20 ஓவர்கள் தொடரில் விளையாடிய இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதேநேரம் மூன்றாவது போட்டியில் தோல்வியை தழுவியது.
இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வங்காளதேசத்தில் உள்ள மிர்புரி நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது.
இதில் 154 ரன் இலக்கை கூட எட்டிப்பிடிக்க முடியாமல் இந்தியா 35.5 ஓவர்களில் 113 ரன்னில் அடங்கியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி வங்காளதேசத்திடம் வீழ்ந்தது இதுவே முதல்முறையாகும். பேட்டிங்கில் இந்திய வீராங்கனைகள் அனைவரும் சொதப்பினர்.
இந்த நிலையில் இந்தியா – வங்காளதேசம் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று(ஜூலை 19) நடக்கிறது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பேட்டிங்கில் தடுமாறும் இந்திய வீராங்கனைகள் எழுச்சி பெற்றால் தான் பதிலடி கொடுப்பதுடன் தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.
அதே நேரத்தில் உள்ளூர் சூழலை சாதகமாக பயன்படுத்தி தொடரை வெல்வதில் வங்காளதேசம் தீவிரம் காட்டும் என்பதால் இந்த போட்டிக்கு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!
கிச்சன் கீர்த்தனா: காரப்புட்டு