இந்தியா vs இலங்கை இறுதிப்போட்டி: மழை பெய்தால் என்ன நடக்கும்?

விளையாட்டு

16வது ஆசிய கோப்பை தொடர், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபால் என 6 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த இறுதிப்போட்டி, கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு துவங்கவுள்ளது. முன்னதாக நடைபெற்ற 15 ஆசிய கோப்பை தொடர்களில், இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும் வெற்றிக்கனியை சுவைத்துள்ள நிலையில், இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இன்று மழை பெய்யுமா? – வானிலை மையம் சொல்வது என்ன?

முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரின் முக்கிய ஆட்டங்களில் மழை இடையூறு அளித்த நிலையில், இன்றைய ஆட்டத்திலும் மழை பெய்யுமா என்ற அச்சம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று கொழும்புவில் மழை பொழிவுக்கான சாத்தியக்கூறுகள் 90% இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காலையிலும் பிற்பகலிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. ஒருவேளை, அப்படி மழை பெய்யும் பட்சத்தில் போட்டி தாமதமாக துவங்கலாம்.

மழை பெய்தால் என்ன நடக்கும்?

வானிலை மைய முன்னறிவிப்பின்படி, இன்று மழை பெய்து இந்தியா vs இலங்கை இடையேயான போட்டி பாதிக்கப்பட்டால், ஆட்டம் 20 ஓவர்கள் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு இல்லாமல், தொடர் மழை காரணமாக இன்று விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால், இந்த ஆட்டம் ‘ரிசர்வ் டே’-வான நாளை நடைபெறும்.

ரிசர்வ் டே-விலும் மழை குறுக்கிட்டால்..?

‘ரிசர்வ் டே’-விலும் இதே போன்ற சூழல் ஏற்பட்டு, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை தொடர முடியாமல் போனால், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்படும். முன்னதாக, 2002ம் ஆண்டு இதே போன்ற நிலை ஏற்பட்டு, இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை என 2 அணிகளுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முரளி

’இன்று முதல்’: சைமா விருதுடன் லோகேஷ் கொடுத்த பிக் அப்டேட்!

ஆசிய கோப்பை 2023: பைனலுக்கு முன்பாக இந்தியாவுக்கு அதிர்ச்சி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *