அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று(அக்டோபர் 18) தெரிவித்துள்ளார்.
ஐசிசி எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, 2023ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை 50 ஓவர் போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்திய அணி அங்கு சென்று விளையாடுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

கடைசி போட்டி!
கடைசியாக 2008ம் ஆண்டு ஆசியக்கோப்பை 50 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்பிறகு அங்கு செல்லவில்லை.
மேலும் இந்தியாவில் 2012ம் ஆண்டு நடைபெற்ற 3டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளே இரு நாடுகளுக்கு இடையேயான கடைசி தொடராகும்.
அதன்பின்னர் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் 10 முறை மட்டுமே மோதியுள்ளன. அதுவும், ஐசிசி உலகக்கோப்பை தொடர்களின் போதே நடைபெற்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா பங்குபெறுவது குறித்து மும்பையில் இன்று நடைபெறும் 91வது பிசிசிஐ வருடாந்திர கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

பாகிஸ்தானில் இந்திய அணி?
அதன்படி இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய்ஷா முக்கிய தகவலை வெளியிட்டார்.
அவர் பேசுகையில் ”அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது.
அதே வேளையில் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்வதற்கு மத்திய அரசின் அனுமதி முக்கியம்.
எனவே, 2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானுக்குப் பதிலாக நடுநிலையான இடத்தில் நடைபெறும்” என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இலங்கையில் ஆசியக்கோப்பை டி20 தொடர் நடத்த முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அந்நாட்டில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதால் ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
கார்டனில் இருந்து சசியை வெளியேற்றிய ஜெ: கிருஷ்ணபிரியா வாக்குமூலம்!
பெங்களூருவில் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் நடத்திய கூட்டம்!