இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது.
இதில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 -1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார்.
பின்னர் , இந்த வெற்றி குறித்து பேசிய அவர், “இது ஒரு சிறப்பான வெற்றி. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற விளையாட்டுகளை ஒரு கேப்டனாக நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
இதை வெறும் சர்வதேச போட்டி என்று மட்டும் பார்க்க முடியாது… நாங்கள் தோற்றுப்போனால் அதிகமான ஏமாற்றங்கள் எங்களிடம் இருக்கும். ஆனால், இந்த போட்டியில் அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர்.
அழுத்தமான சூழ்நிலைகளில் அதை எதிர்கொள்வது முக்கியம். அப்படி இருந்தால் தான் நாம் ஹீரோ ஆக முடியும்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அணியின் ஒருங்கிணைந்த அங்கம். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஓய்வளிக்க வேண்டியது அவசியம்.
ஆட்டத்திற்கு முன் விராட் கோலியுடன் நன்றாக உரையாடினேன். 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து அவரது அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதற்கு இந்த நேரத்தில் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால்… அமைச்சர் காந்தி எச்சரிக்கை!
‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஊக்கத்தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு: ED மனு இன்று விசாரணை!
WI vs IND: சுப்மன் கில் அதிரடி… ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்தியா