இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 1) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிரைன் லாரா கிரிக்கெட் அகாடாமி மைதானத்தில் தொடங்குகிறது.
ஏற்கனவே , ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான டி 20 இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் ஒருநாள் தொடரின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடஜே ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் இன்று (ஆகஸ்ட் 1) அறிவித்துள்ளது.
அதன்படி, ஷாய் ஹோப் மற்றும் ஓஷேன் தாமஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடரில் இடம் பெறாத பூரன், ஹோல்டர் ஆகியோர் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் டி 20 அணி:
ரோவ்மேன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (விக்கெட் கீப்பர் ), ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், ஓபேட் மெக்காய், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒஷன் ஸ்மித், ஓஷேன் .
இந்திய டி20 அணி:
இஷான் கிஷன், சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார்.
போட்டி நடைபெறும் நாட்கள்:
முதல் போட்டி: ஆகஸ்ட் 3 பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, டிரினிடாட்
இரண்டாவது போட்டி: ஆகஸ்ட் 6 நேஷனல் ஸ்டேடியம், கயானா
மூன்றாவது போட்டி: ஆகஸ்ட் 8 நேஷனல் ஸ்டேடியம், கயானா
நான்காவது போட்டி: ஆகஸ்ட் 12 ப்ரோவ்ர்டு கவுண்டி ஸ்டேடியம், லாடெரஹில், புளோரிடா
ஐந்தாவது மற்றும் இந்த தொடரின் கடைசி இருபது ஓவர் போட்டி: ஆகஸ்ட் 13 ப்ரோவ்ர்டு கவுண்டி ஸ்டேடியம், லாடெரஹில், புளோரிடா
மு.வா.ஜெகதீஸ் குமார்
WI vs IND: நீயா! நானா! ஒரு நாள் கோப்பை யாருக்கு?
நெம்மேலி குடிநீர்: மேலும் 9 லட்சம் பேர் பயனடைவார்கள் – சிவ்தாஸ் மீனா