தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 இருபது ஓவர் (டி20) போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டி20 போட்டியில் இந்தியாவை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி கயானாவில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அதானால், இந்திய அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்த 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 8) நடைபெறும் 3-வது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தோற்றால் தொடரை இழந்து விடும். அதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து தங்களது முழு திறமையை வெளிப்படுத்துவார்களா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்தியா ஆடும் லெவன் வீரர்கள் உத்தேச பட்டியல்:
இஷான் கிஷன், சுப்மன் கில் அல்லது ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), அக்சர் படேல், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் அல்லது குல்தீப் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் ஆடும் லெவன் வீரர்கள் உத்தேச பட்டியல்:
பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிகோலஸ் பூரன், ரோமன் பவெல் (கேப்டன்), ஹெட்மயர், ரொமாரியோ ஷெப்பர்டு, ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், ஒபெட் மெக்காய்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
கதிரியக்க நீரை கடலில் கலக்கும் ஜப்பான்: எதிர்க்கும் சீனா!