WI vs IND: சுப்மன் கில் அதிரடி… ஒரு நாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

Published On:

| By Jegadeesh

wi vs ind 3rd odi

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்றது.

இதில்,ரோகித் சர்மா, விராட் கோலி களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்தேவ் உனட்கட் அணியில் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் களம் இறங்கினர்.இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தனர்.

இதில் இஷான் கிஷன் 64 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 77 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 92 பந்துகளில் 11 பவுண்டரிகள் உட்பட 85  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர்களை தொடர்ந்து அடுத்ததாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் ஆட்டமிழக்க சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை பறக்கவிட்டார். அதன்படி மொத்தம் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர், இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் களமிறங்கினர். அதன்படி, ஹர்திக் பாண்ட்யா தனக்கே உரித்தான தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

52 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என 70 ரன்னுடன் களத்தில் நிற்க சூர்ய குமார் யாதவ் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  இந்தியா 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் எடுத்தது.

பின்னர்,  352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

அதில், 5 பந்துகளை மட்டுமே சந்தித்த பிராண்டன் கிங் ரன் ஏதும் எடுக்காமல் நடையைகட்ட கெய்ல் மேயர்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்களும், கார்டி 6 ரன்களும், ஹெட்மயர் 4 ரன்களும், ஷேப்பர்டு 8 ரன்களும் எடுக்க இந்திய அணியின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி வாய்ப்பை இழந்தது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நிர்மலா சீதாராமனை சந்தித்த பிடிஆர்: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel