WI vs IND: நீயா! நானா! ஒரு நாள் கோப்பை யாருக்கு?
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 1) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளை விளையாடி முடித்துள்ளது.
இதில் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது. மேலும், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஜூலை 29 தொடங்கிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
தற்போது இரண்டு அணிகளும் 1-1 என்ற கணக்கில் உள்ளது.
இந்நிலையில், 3 வது மற்றும் இந்தத் தொடரின் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஒரு நாள் தொடருக்கான கோப்பையை கைப்பற்றும்.
கடந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் இருவரும் களம் இறங்க உள்ளதால் இந்திய அணிக்கு பேட்டிங் சற்று பலம் வாய்ந்ததாகவே இருக்கும்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் சாய் ஹோப் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கைல் மேயர்ஸ் அவருக்கு பக்கபலமாக அதிரடியாக விளையாடி வருவதால் பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலமாகவே உள்ளது எனவே இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
உத்தேச இந்தியா அணி ஆடும் லெவன்
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், சாஹல், முகேஷ் குமார்.
உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடும் லெவன்
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அத்தனாஸ், ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கீசி கார்டி, ரொமாரியோ ஷெப்பர்ட், யான்னிக் கரியா, அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோதி, ஜேடன் சீல்ஸ்
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: சாமை பால் பொங்கல்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
டிஜிட்டல் திண்ணை: இந்திய மக்கள் மனநிலை! சர்வே ரிப்போர்ட்- மோடி ஷாக்!